சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை

சென்னை: தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் இருந்து பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.மழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது நாளாக நாளையும் ( நவ.,2 ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
chennai