புழல் சிறையில் வைக்கப்பட்ட டிவி - ரேடியோக்கள் பறிமுதல்

புழல் சிறையில் வைக்கப்பட்ட டிவி - ரேடியோக்கள் பறிமுதல்

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த வசதிகளை செய்துகொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக புகைப்படங்கள் வெளியாகின.

இதனையடுத்து சிறைத்துறை டிஐஜி முருகேசன் புழல் சிறையில் உள்ள 24 உயர்மட்ட பாதுகாப்பு அறைகளில் திடீர் சோதனை நடத்தினார். இதில் முதல் வகுப்பு அறையில் 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 எப்எம்., ரேடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.