சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி: பழனிசாமி

சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது உறுதி: பழனிசாமி

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.  பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தமிழக சட்டபேரவையில் பேசிய முதலவர் பழனிசாமி சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தமிழக அரசு உறுதியாக உள்ளது.