கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்...

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறை மூலம் முடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது. 

இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கி இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் நிறுவன சொத்துக்கள் ஆகும் இது.