தேனி: கள்ளநோட்டை அச்சடித்து ஏடிஎம்ல் டெபாசிட் செய்த விஷமிகள் கைது

தேனி: கள்ளநோட்டை அச்சடித்து ஏடிஎம்ல் டெபாசிட் செய்த விஷமிகள் கைது

தேனி: கள்ளநோட்டு அச்சடித்து அதனை தனியார் வங்கி ஏடிஎம்-மில் டெபாசிட் செய்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தேனி- கம்பம் சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பணம் செலுத்தும் மிஷினில் கடந்த 4-ம் தேதியில் இருந்து நேற்று வரை வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் கடந்த சில தினங்களில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.

அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரே வரிசை எண்கள் உள்ள ரூபாய் நோட்டுக்கள் இருந்ததால், அவை கள்ளநோட்டு என்று கண்டுபிடிக்கப்பட்டதுசம்பவம் தொடர்பாக வங்கி கிளை மேலாளர் ஜோசப் இமானுவேல் தேனி காவல் நிலையத்தில் பணத்தை டெபாசிட் செய்த ஜஹாங்கீர் பற்றி புகார் கொடுத்தார். இதையடுத்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஜஹாங்கீரை போலீசார் கைது செய்தனர்.