பெண் புரோக்கர் பேராசிரியர் நிர்மலா தேவி கைது

பெண் புரோக்கர் பேராசிரியர் நிர்மலா தேவி கைது

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைரக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக உள்ளவர் நிர்மலா தேவி.

இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வருமாறு 4 மாணவிகளை போனில் வற்புறுத்திய ஆடியோ காட்சிகள் வெளியானது.இது சமூக வலைதளங்களில் பரவியதால் தமிழக கல்வித்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்திருந்தார்.