போடி அருகே குரங்கணியில் காட்டுத்தீ

போடி அருகே குரங்கணியில் காட்டுத்தீ

தேனி: கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் குரங்கணியை நோக்கி மலையேறும் பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர். நேற்று இரவு மலைப்பகுதியில் தங்கிவிட்டு குரங்கணி நோக்கி புறப்பட்டு சென்று உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மிகவும் அடர்ந்த வனப்பகுதியில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அங்கு காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. காட்டுத்தீயில் மலையேறும் பயிற்சியை மேற்கொண்ட மாணவிகள் சிக்கிஉள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. குரங்கணி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீ ஏற்படுவதும், அதனை வனைத்துறை அணைப்பதும் தொடர் சம்பவமாக இருந்து உள்ளது.   

மாணவிகள் சிக்கிய பகுதியானது எளிதில் யாரும் நெருங்க முடியாத பகுதியாகும், தொலை தொடர்பு வசதியில்லாத பகுதியாகும். அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குரங்கணி காவல் நிலையத்திற்கு தெரிவித்த தகவல் மூலமாகவே வெளியே தெரியவந்து உள்ளது. 

காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிக்கு வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணிக்கு விரைந்து உள்ளனர். மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.