கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தம்

கன்னியாகுமரி : காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருவதால் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கான பேருந்துகள் இயக்கம் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் தக்கலை , மார்த்தாண்டம் , களியக்காவிளை போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்ட காரணத்தால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அரசு பேருந்துகள் மற்றும் பயணிகள் எல்லைப் பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.