கன மழை: நாகை, திருவாரூர் புதுக்கோட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை: நாகை, திருவாரூர் புதுக்கோட்டையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை தொடருவதால் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாகையில் மழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை தொடருவதால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.