குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு...சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு...சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.