மோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

மோடியின் துணிச்சலான முடிவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

சென்னை:நேற்று நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றியபோது அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது நாடே ஸ்தம்பித்துப் போனது. முதலில் அதிர்ச்சி அடைந்த மக்கள் பின்னர் பாராட்டத் தொடங்கினர். தற்போது மோடியின் துணிச்சலான முடிவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மேலும் மத்திய அரசின் திடீர் இந்த  அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார்.

இது குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில்  கூறியது,“கட்சிகளைக் கடந்து கொண்டாடப்படும் நடவடிக்கை” எனவும் 'முக்கியமாக முறையாக வரி செலுத்துவோர் பாராட்டக்கூடிய நடவடிக்கை' எனவும் கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்

Salute Mr. Modi. This move has to be celebrated across political party lines. Most importantly by earnest tax payers.

— Kamal Haasan (@ikamalhaasan) November 9, 2016