கர்நாடகாவில் நீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

கர்நாடகாவில் நீர் திறப்பு: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரத்து 969 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 28 ஆயிரத்து 300 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியாகவும், நீர் இருப்பு இருப்பு 88.53 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து பாசன கால்வாய்களுக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகாவில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.