கருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி

கருணாநிதியின் தனி செயலாளர் விஸ்வநாதன் கார் விபத்தில் பலி

சென்னை: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன்,  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.  இவர் முன்னாள் முதல்-அமைச்சரும்,  திமுக தலைவர் கருணாநிதியிடம் தனி செயலாளராக பணியாற்றி வந்தார். 

ஓய்வு பெற்ற பின்னர் அண்ணாநகரில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து காரில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.