சிலை கடத்தல் வழக்கில் டிஎஸ்பி காதர்பட்ஷா கைது

சிலை கடத்தல் வழக்கில் டிஎஸ்பி காதர்பட்ஷா கைது

சென்னை: காவல்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு தலைமறைவாக இருந்த டிஎஸ்பி காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி ஆரோக்கியராஜ் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார். அப்போது 6 பழங்கால சிலைகள் கிடைத்தன இந்த சிலைகளை ஆரோக்கியராஜ் விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இது குறித்து தகவல் கிடைக்க போலீஸ் அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோர் ஆரோக்கியராஜிடம் இருந்து சிலைகளை பறிமுதல் செய்து கடத்தி வந்தனர். 

இதனை தாய்லாந்திற்கு கடத்த உதவியதாக டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி காவல் நிலையத்தில் ஐம்பொன் சிலையை கடத்தி விற்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் டிஎஸ்பி காதர் பாட்ஷா தலைமறைவாக இருந்தார். அவரைப் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், காதர் பாட்ஷாவை நேற்று கும்பகோணத்தில் கைது செய்தனர்.