ஊழல் புகார்களை விசாரிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா பணி தொடக்கம்

ஊழல் புகார்களை விசாரிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா பணி தொடக்கம்

சென்னை : தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட 26 பணியிடங்களை உறுதி செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. லோக் ஆயுக்தா தலைவர் இந்த 26 பணியிடங்களுக்கான தகுதியான உறுப்பினர்களை தேர்வு செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.