மதுரை அடகு கடையில் 500 பவுன் நகை கொள்ளை

மதுரை அடகு கடையில் 500 பவுன் நகை கொள்ளை

மதுரை: மதுரை, காமராஜர்புரம், குமரன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (72). மாட்டுத்தாவணியில் விறகு கடை வைத்துள்ளார். வீட்டில் அடகு கடையும் நடத்தி வருகிறார். 

இன்று (ஜன.,12) அதிகாலை, தங்கவேல் கடைக்கு சென்ற பின்னர், அவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் நடை பயிற்சிக்கு சென்றார். காலை 5.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.