நிரம்பும் மதுராந்தரம் ஏரி... 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பும் மதுராந்தரம் ஏரி... 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் அங்குள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மிகப் பெரிய ஏரியான இதன் கொள்ளளவு 23.30 அடியாகும். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் இதன் நீர் மட்டம 20.50 அடியாக உள்ளது.இதனால் மதுராந்தகம் ஏரியிலிருந்து கிளியாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதையடுத்து அங்கு வலது கரை, இடது கரையோரங்களில் உள்ள குன்னத்தூர், மலையப்பாளையம், தோட்ட நாவல், கே.கே.புதூர், விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், நீலமங்கலம், கத்திரிசேரி, வீராணகுண்ணம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுமார் 10,000 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளன. மேலும் இந்த ஏரி ஆபத்தான பகுதியாக உள்ளதால் இங்கு குளிப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.