மானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

மானாமதுரை அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

மானாமதுரை: மானாமதுரை பேரூராட்சியில் ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி பார்த்திபனூர் ரஸ்தா, கடைவீதி, அண்ணாசிலை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், மகளிர்சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் டெங்கு, சிக்குன்குனியா நோய்கள் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்து ஆட்டோ, மைக்செட் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. பேரூராட்சி பரப்புரையாளர்கள் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக ஊர்வலத்தை மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் சகர்பான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.