தூத்துக்குடி தண்டவாளத்தில் சூழ்ந்த மழை நீர்...எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!

 தூத்துக்குடி தண்டவாளத்தில் சூழ்ந்த மழை நீர்...எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம்!

தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது திருவனந்தபுரத்திலிருந்து 308 கி.மீ.தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இதனால் தென்தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் நிலையத்துக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள மேலூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் அரபிக் கடலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.