விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது;வைகோ சாடல்

 விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது;வைகோ சாடல்

சென்னை:ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது முட்டாள்தனமான முடிவுகளில் ஒன்று மேலும் விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால்  என் இமேஜ் போய்விட்டது உண்மை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ ஆனந்த விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “அரசியலில் முட்டாள்தனமான முடிவுகள் எடுத்திருக்கிறேன். அதைச் சொல்வதில் தவறில்லை. நான் எடுத்த முடிவுகளில் மிகத் தவறான முடிவு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது.
 
என்னை ஜெயில்ல வைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் என் கிரிடிபிலிட்டி நொறுங்கி போய்விட்டது. நம்பகத்தன்மை தரைமட்டமாயிடுச்சு! விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டதால் என் இமேஜ் போய்விட்டது உண்மை' என்று கூறியுள்ளார்.