நாகை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை

நாகை, எண்ணூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை

சென்னை: நாகை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மும்பை முதல் தமிழகம் வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 4வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் நாகை, எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.