நெல் ஜெயராமன் புற்றுநோயால் காலமானார்

நெல் ஜெயராமன் புற்றுநோயால் காலமானார்

சென்னை: அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 50. திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார்.

பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.