அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்...தலைமைக் கழகம் அறிவிப்பு

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்...தலைமைக் கழகம் அறிவிப்பு

அதிமுகவில் வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு ஆகிய சார்பு அமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு அமைப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு புதிய நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சி தலைமையகம் வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ப. மோகன் அமைப்புச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தேர்தல் பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி விவசாயப்பிரிவு செயலாளராகவும், நிர்மலா பெரியசாமி கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா அனைத்துலக எம்ஜிஅர் மன்ற இணைச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அம்மா பேரவை இணைச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிமுக தலைமைக் கழகம் 5 புதிய  நிர்வாகிகளை நியமித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.