தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என அமைச்சர் தங்கமணி

சென்னை: சட்டசபையில் இன்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பேசுகையில், திருவொற்றியூரில் காலையில் இருந்து மதியம் வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. சட்டசபை முடிந்து நான் சென்றபோது பொதுமக்கள் பலர் எனக்கு போன் செய்து மின்சாரம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். அது எனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது என்றார்.

இதற்கு மின்துறை அமைச்சர் பதில் அளிக்கையில், இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது. மின்வெட்டு எங்கும் இல்லை என்றார்.