பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்வு

சென்னை: சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அதன்படி, எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி   சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து  லிட்டருக்கு ரூ.73 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது.