மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை அமலுக்கு வருகிறது

மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை அமலுக்கு வருகிறது

மதுரை : மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக 2 நாட்களுக்கு முன் கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுக்கள், கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது