புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்திப்பு

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்திப்பு

புதுச்சேரியில் மத்திய அரசு முறையாக மூன்று எம்எல்ஏக்களை நியமனம் செய்தது. ஜூலை 4-ம் தேதி பதவிப் பிரமாணத்தை ஆளுநர் செய்து வைத்தார். நியமனம் செய்தது சரி என்று நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்தனர். வரும் 26-ம் தேதி கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளனர்.