பொங்கல் விடுமுறை: ரயில் நிலையங்களில் அலை மோதும் கூட்டம்

பொங்கல் விடுமுறை: ரயில் நிலையங்களில் அலை மோதும் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகை கிராமங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்புவது வழக்கம்.இதனால் சென்னை பேருந்து, மற்றும் ரெயில்  நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

இதனை சமாளிக்க ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் இம்முறையும் தமிழகஅரசு சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 
சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கி இயங்கிவருகின்றன. பயணிகளின் வசதிக்காக 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று மட்டும் அரசு சிறப்பு பேருந்துகளில் 1.45 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து வெளியூருக்கு சென்றனர்.