புதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி

புதுச்சேரி:3 ஆயிரம் பேருடன் மத்திய மந்திரி யோகா பயிற்சி

புதுச்சேரி: 4-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலையில் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்ட பெருந்திரள் யோகா பயிற்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். மத்திய உணவு பதனிடும் தொழில்கள் அமைச்சக இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். அவருடன் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.