நாகர்கோவிலுக்கு 13ந்தேதி ராகுல் வருகை

நாகர்கோவிலுக்கு 13ந்தேதி ராகுல் வருகை

நாகர்கோவில்: தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை தொடங்கி விட்டது. வடமாநிலங்களில் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்திலும் ராகுல் காந்தியின் பிரசாரம் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.

தமிழகம் வரும் ராகுல் காந்தி நாகர்கோவிலில் முதல் கட்ட பிரசாரத்தை நடத்துகிறார். இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதனை கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் அழகிரி ஆகியோர் பார்வையிட்டு சென்றனர்.