சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை: வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. பின்னர் விட்டு, விட்டு மழை நீடித்தது. இன்று காலையும் பரவலாக மழை நீடித்தது.

எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், செங்குன்றம், சோழவரம், திருவொற்றியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, போரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காலையில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் தேங்கியதால் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்தது. திருவள்ளூர், பொன்னேரி, பழவேற்காடு, ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து மழை நீடித்தது.மாவட்டத்தில் அதிக பட்சமாக பொன்னேரியில் 13 செ. மீட்டர் மழை பெய்து உள்ளது.