தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

கனமழை எதிரொலியாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன்காரணமாகதமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. 

கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தூத்துக்குடி, நெல்லையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது மாவட்ட நிர்வாகம். பொதுத் தேர்வு இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு உள்ளவர்களும், தேர்வு கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டவர்களும் வழக்கம் போல் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.