பீட்டாவை தடை செய்ய வேண்டும்...பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன் வலியுறுத்தல்

பீட்டாவை தடை செய்ய வேண்டும்...பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என பாஜக எம்பி இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை அடுத்த திருநின்றவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜல்லிக்கட்டு நடக்க பாஜக தீவிர உணர்வோடு செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என பிரதமரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடையாக உள்ள பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் பின்னணியில் உள்ளது யார் என்பது குறித்தும், நிதி உதவி செய்வது யார் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இல.கணேசன் கேட்டுக்கொண்டார்.


Loading...