சவுமிய மூர்த்தி தொண்டைமான் பெயரை  இலங்கையில் மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும்: சுஷ்மாவுக்கு ஸ்டாலின் கடிதம்

சவுமிய மூர்த்தி தொண்டைமான் பெயரை  இலங்கையில் மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும்: சுஷ்மாவுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: 'இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பங்காற்றிய, சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை, அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்து  இலங்கை அரசு நீக்கி வருகிறது.இது தொடர்பாக ஸ்டாலின்  சுஷ்மாவுக்கு கடிதம் எழுதினார். 

இலங்கை அரசின் இந்த கண்டனத்துக்குரிய நடவடிக்கைகள் மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு இந்தியத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.பல ஆண்டுகளாக இந்தியத் தமிழர்கள், இலங்கையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், அவர்களுடைய பங்களிப்பையெல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு சவுமியமூர்த்தி தொண்டைமான் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து நீக்கியிருக்கிறது. மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், கண்ணியத்துக்காகவும் சவுமியமூர்த்தி தொண்டைமான் பாடுபட்டார் என்ற உண்மையை உணர்ந்திருப்பீர்கள்.

சவுமியமூர்த்தி தொண்டைமான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கவாதியாக குரல் கொடுத்தார், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திருத்தக் குழுவின் தேர்வுக் குழு உறுப்பினராகவும் இருந்ததோடு, இலங்கையின் அதிபர்கள் பலரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி இந்தியத் தமிழர்களின் நலனுக்காக பங்காற்றியிருக்கிறார்.எனவே, இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு இந்தியத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.