விரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்

விரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்

திமுக தோழமைக்கட்சிகள் ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின் அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், உழவர் உழைப்பாளர் கட்சி என, தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஆதித்தமிழர் பேரவை, சமத்துவ மக்கள் கழகம், இந்திய தேசிய லீக், கிருத்துவ நல்லிணக்க கட்சி உள்ளிட்ட கட்சிகள் என்னை சந்தித்தனர்.

கூட்டத்தில் ஆதரவை தெரிவித்தனர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னவகையான பிரச்சாரம் செய்யலாம், யுக்திகள் குறித்த ஆலோசனை அளித்தனர். அதற்காக நன்றித்தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமைக்கட்சிகள் காங்கிரஸுக்கு எப்போது தொகுதி ஒதுக்கப்படும்?காங்கிரஸ் கட்சி தொகுதி குறித்து பேசக்குழுவை இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் பேசினேன் இன்று இரவு அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார். பின்னர் நாளை பேசி காங்கிரஸ் குறித்து முடிவு செய்யும்.