சென்னை  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தஹில் ரமானி

சென்னை  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தஹில் ரமானி

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜய கம்லேஷ் தஹில் ரமானிக்கு வரும் 12-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் விஜய கம்லேஷ் தஹில் ரமானியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.