நாளை கரையை கடக்கும் தித்லி புயல்

நாளை கரையை கடக்கும் தித்லி புயல்

சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள, 'தித்லி' புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள
மத்திய வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள தித்லி புயல், தீவிர புயலாக உருவெடுத்து, ஒடிசாவில் உள்ள கோபல்பூரில் இருந்து தென் கிழக்கே 370 கி.மீ., தொலைவில் உள்ளது. அது மேலும் வலுவடைந்து, ஒடிசாவின் கோபல்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கபட்டினம் இடையே, நாளை கரையை கடக்கும். அரபிக்கடலில், லூபன் புயல் ஓமனை நோக்கி, வட மேற்கு திசையில் நகர கூடும்.