திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் துப்பாக்கி குண்டுகள்

சென்னை: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னைக்கு இன்று காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின்னர், ஊழியர்கள் ரயில் பெட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பி 2 என்ற ரயில் பெட்டியில் ஊழியர்கள் சுத்தப்படுத்திய போது, 8 ம் எண் இருக்கைக்கு கீழ் சுருட்டப்பட்ட காகித பொட்டலம் ஒன்று இருப்பதை பார்த்தனர். அதை எடுத்து பார்த்த போது, அதில் வெடிக்கப்படாத 3 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.