சட்டசபையில் அநாகரீகமான முறையில் வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்

சட்டசபையில் அநாகரீகமான முறையில் வெளியேற்றப்பட்டதாக விஜயதரணி எம்எல்ஏ புகார்

சென்னை; சட்டசபையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விஜயதரணி சபாநாயகருடன் மோதலில் ஈடுபட்டதால் அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
விஜயதரணி நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
சபை காவலர்கள் என்னை அநாகரீகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றினார்கள். சேலையைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் வயிற்றை அமுக்கியும் வெளியேற்றினார்கள். சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார். இவ்வாறு விஜயதரணி கூறினார்.