இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்...

இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்...

இந்தியாவில் இன்ஃபோகஸ் நிறுவனத்தின் இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இன்ஃபோகஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் மற்றும் ஸ்னாப் 4 என இரண்டு ஸ்மார்ட்போன்களும் அதிவேகமாக இயங்கும் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டுள்ளன.மெட்டல் வடிவமைப்பு கொண்ட புதிய இன்ஃபோகஸ் ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டர்போ 5 பிளஸ் ஸ்மார்ட்போன் டர்போ 5 ஸ்மார்ட்போனின் பெரிய மாடல் ஆகும். 

ஸ்னாப் 4 ஸ்மார்ட்போனில் பெயருக்கு ஏற்றார்போல் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. 8 எம்பி டூயல் செல்ஃபி கேமரா மற்றும் 13 எம்பி + 8 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.