வாட்ஸ் ஆப்பில் போலி செய்தியை அடையாளம் காண புதிய வசதி அறிமுகம்...

 வாட்ஸ் ஆப்பில் போலி செய்தியை அடையாளம் காண புதிய வசதி அறிமுகம்...

இந்தியாவில் தகவல் பரிமாற்றத்தில் வாட்ஸ் ஆப் முதலிடத்தில் உள்ளது. மாதத்திற்கு சுமார் 20 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை அதிகமானோர் பயன்படுத்துவதால் மோசடி நபர்கள் போலி செய்தி அல்லது விளம்பரங்களை இதில் பரப்பி வருகின்றனர்.இந்த பிரச்னையை எதிர்கொள்ள வாட்ஸ் ஆப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மற்றொரு நபரில் தகவலை நாம் பகிர்ந்தால் அதில் ‘ஃபார்வேர்டட்’ என்று அடையாளம் குறிப்பிடப்பட்டிரு க்கும். இது தகவலை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் தெரியும் வகையில் இடம்பெறும்.இதன் மூலம் இந்த குறிப்பிட்ட ஒரு தகவல் பலரால் பகிரப்படுகிறது என்பதை அடையாளம் காண உதவியாக இருக்கும்.

இதற்கு வாட்ஸ் ஆப் 2.18.179 என்ற புதிய வெர்சனை அப்டேட் செய்ய வேண்டும். இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயனீட்டாளர்கள் செய்திகளை உண்மை தன்மை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.‘குட் மார்னிங்’ போன்ற தகவல்களை அதிகம் பகிர்வதால் எந்த பிரச்னையும் ஏற்பட போவதில்லை.ஆனால், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் போலியான தகவல்கள் பெரும்பாலான மக்களை சென்றடைவதை இது கட்டுப்படுத்தும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேபோல் மற்றவரின் எழுத்து திறனை தனது எழுத்து திறன் போல் பகிர்ந்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் இனி முடியாது. அதில் ‘ஃபார்வேடட்’ என்று குறியீடு காட்டிக் கொடுத்துவிடும்.