ஜூன் மாத இறுதியில் களமிறங்கும் மோட்டோ எக்ஸ் 4!

 ஜூன் மாத இறுதியில் களமிறங்கும் மோட்டோ எக்ஸ் 4!

புதுடெல்லி: மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் ஜூன் மாத இறுதியில் இந்திய சந்தையில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மோட்டோரோலாவின் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், மோட்டோ எக்ஸ் மாடலில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இம்மாத இறுதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

மோட்டோ எக்ஸ் 4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் நடுத்தர விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரி யாதிம் என்பவர் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்களில் புதிய மோட்டோ எக்ஸ் 4 ஜூன் மாதம் 30-ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்திய சந்தையில் ரூ.20,999 என்ற விலையில் மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியை வழங்கும் IP64 சான்று பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஸ்மார்ட்போன் சுற்றி கிளாஸ் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மோட்டோ எக்ஸ் 4 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 

* 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3800 எம்ஏஎச் பேட்டரி
* கைரேகை ஸ்கேனர்
* 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர்
* 13 எம்பி செல்ஃபி கேமரா f/2.2 அப்ரேச்சர்

மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனுடன் மோட்டோ ஜி5எஸ்+ ஸ்மார்ட்போன் மற்றும் மோட்டோ இசட் 2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ.17,999 மற்றும் ரூ.38,999 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.