நோக்கியா, பிளாக்பெரி சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்

நோக்கியா, பிளாக்பெரி சாதனங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்

சான்பிரான்சிஸ்கோ: உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் சேவை பழைய இயங்குதளங்களில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில நோக்கியா மற்றும் பிளாக்பெரி ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் சேவைகள் ஏற்கனவே சில இயங்குதளம் மற்றும் மொபைல் போன்களில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நோக்கியா போன் மற்றும் பிளாக்பெரி இயங்குதளங்களில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நோக்கியா எஸ்40, நோக்கியா எஸ்60, பிளாக்பெரி இயங்குதளம் மற்றும் பிளாக்பெரி 10 இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாதனங்களில் ஜூன் 30-ந்தேதிக்கு பின் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் முடிவிற்கு பிளாக்பெரி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2016 முதல் ஜூன் 2017 வரை வாட்ஸ்அப் சேவைகள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் 7, ஐஓஎஸ் 6 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2 இயங்குதளங்களுக்கு வாட்ஸ்அப் சேவை கடந்த டிசம்பரில் நிறுத்தப்பட்டது. வாட்ஸ்அப் புதிய அப்டேட்கள் பழைய இயங்குதளங்களில் வேலை செய்யாது என்பதால், சேவை நிறுத்தப்படுகிறது என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய இயங்குதளங்களில் செயலியின் புதிய வசதிகளை இயக்க வழி செய்யாது என்பதால் புதிய இயங்குதளங்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம் என வாட்ஸ்அப் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


Loading...