வியப்பூட்டும் சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி 4

வியப்பூட்டும் சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ரெட்மி 4

புதுடெல்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ரெட்மி 4 விற்பனை இன்று மதியம் நடைபெற உள்ளது. மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரெட்மி 4 விற்பனை இன்று மதியம் நடைபெறுகிறது. மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 4 விலை ரூ.6,999 முதல் துவங்குகிறது. இதில் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி, ரூ.8,999 விலையில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, ரூ.10,999 விலையில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. 

பிளாஷ் முறையில் விற்பனைக்கு வரும் ரெட்மி 4 அமேசான் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் நடைபெறுகிறது. மதியம் 12.00 மணிக்கு துவங்கும் பிளாஷ் விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.  

* சியோமி எம்ஐ கேஸ்களின் விலையில் இருந்து ரூ.150 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.349க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி 4 ஸ்மார்ட்போன் வாங்குவோர் எம்ஐ ஹெட்போன்களை ரூ.599க்கும், எம்ஐ ஏர் கேப்ஸ்யூல் இயர்போன்களை ரூ.999க்கும் வாங்க முடியும். 

* தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் ரூ.500 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் கோஇபிபோ மூலம் விமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது ரூ.500 தள்ளுபடி பெற முடியும். மேலும் ரூ. 4000க்கும் அதிகமான விலையில் தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்தால் ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

* ரெட்மி 4 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் 45 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. இலவச டேட்டா பெற வாடிக்கையாளர்கள் 1 ஜிபிக்கும் அதிகமான சலுகை திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும், இவ்வாறு செய்யும் போது முதல் ஐந்து ரீசார்ஜ்களுடன் 9 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ரீசார்ஜ்களை செய்ய ஐந்து மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

* இத்துடன் ரெட்மி 4 வாங்குவோர் கின்டிள் செயலியை டவுன்லோடு செய்து சைன்-இன் செய்தால் கின்டிள் புத்தகங்களில் ரூ.200 கிரெடிட் பெற முடியும். இந்த சலுகை  முதல் 100,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சியோமி ரெட்மி 4 சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 4100 எம்ஏஎச் பேட்டரி
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ