சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) இந்தியாவில் அறிமுகம்...

 சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) இந்தியாவில் அறிமுகம்...

புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 (2017) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கேலக்ஸி ஜெ2 (2017) ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை சார்ந்து எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் ஸ்மார்ட்போனினை வாங்குவதற்கான வசதியும் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஜெ2 (2017) ஸ்மார்ட்போன் மேட் ஃபார் இந்தியா டேக் கொண்டிருப்பதோடு, ஸ்மார்ட் மேனேஜர் மற்றும் அல்ட்ரா டேட்டா சேவிங் மோட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.  

சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) சிறப்பம்சங்கள்:

- 4.7 இன்ச் QHD, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் எக்சைனோஸ் பிராசஸர்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 5 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி, GPRS/EDGE, ப்ளூடூத்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 2000 எம்ஏஎச் பேட்டரி  

டூயல் கேமரா ஸ்லாட் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) ஸ்மார்ட்போனின் விலை அறிவிக்கப்படாத நிலையில் இதன் விலை ரூ.7,390 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என மும்பையை சேர்ந்த மகேஷ் டெலிகாம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மெட்டாலிக் கோல்டு மற்றும் அப்சல்யூட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.