ஸ்மார்ட் டேப் என் 8: வோடபோன் நிறுவனம் அறிமுகம்

  ஸ்மார்ட் டேப் என் 8: வோடபோன் நிறுவனம் அறிமுகம்

புதுடெல்லி: வோடபோன் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டேப் என்8 சாதனம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பட்ஜெட் ரக டேப்லெட்டை ஏற்கனவே பிளாக்பெரி மற்றும் ஆல்காடெல் சாதனங்களை தயாரித்த டிசிஎல் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டேப் என்8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வொல்கானோ பிளாக் நிறத்தில் கிடைக்கும் புதிய டேப்லெட் 10.1 இன்ச் ஐபிஎஸ், 1200x800 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் MT8735B பிராசஸர் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. 

இத்துடன் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 4600 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள ஸ்மார்ட் டேப் என்8 புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமராவும், 2 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.  

ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டேப் என்8 எல்டிஇ கேட்4, ப்ளூடூத் 4.1, வைபை உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது.