இந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை நிறுத்தம்...

இந்தியாவில் விரைவில் வாட்ஸ்அப் பே சேவை நிறுத்தம்...

வாட்ஸ்அப் பே சேவை தற்சமயம் குறைந்த பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் பே சேவையை நாடு முழுக்க வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா கழகம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை அந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முடியும். 

முன்னதாக 2018 ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் பத்து லட்சம் பேருடன் வாட்ஸ்அப் பே சேவைக்கான சோதனையை துவங்கியது. எனினும் அரசு அனுமதி கிடைக்காததால் இந்த சேவையை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை.தற்சமயம் தடைகள் நீங்கி சேவையை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ்அப் பே சேவை முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த சேவை யு.பி.ஐ. மூலம் மொபைலில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வழி செய்யும்.

நாடு முழுக்க சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பே சேவை வழங்கப்படும் போது, நாட்டின் மிகப்பெரும் மொபைல் பேமண்ட் சேவைகளில் ஒன்றாக இது இருக்கும் என கூறப்படுகிறது.