ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட புதிய இயர்போன் விரைவில் அறிமுகம்

ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்ட புதிய இயர்போன் விரைவில் அறிமுகம்

சியோமி இந்தியா நிறுவனம் பிப்ரவரி 25-ம் தேதி இந்தியாவில் புதிய ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக சியோமி Mi அவுட்டோர் ஸ்பீக்கர் மற்றும் Mi டூத்பிரஷ் உள்ளிட்ட சாசதனங்களை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.அந்த வரிசையில் சியோமி இந்தியா புதிய சாதனத்திற்கான டீசரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. டீசருடன் #HDAudio பிப்ரவரி 25 இல் அறிமுகம் எனும் தகவல் இடம்பெற்று இருக்கிறது. டீசர் வீடியோவில் புதிய இயர்போன் பிரெயிட் செய்யப்பட்ட கேபிள் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.


அந்த வகையில் புதிய சியோமி சாதனம் வையர்டு இயர்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த இயர்போன் டூயல் டிரைவர்கள் மற்றும் ஹெச்.டி. ஆடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. சியோமியின் புதிய இயர்போன் தற்சமயம் சியோமி விற்பனை செய்து வரும் Mi இயர்போன்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. 

புதிய இயர்போன் ரியல்மி பட்ஸ் 2 சாதனத்திற்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம். இதில் 11.2 எம்.எம். பூஸ்ட் டிரைவர், டூயல் டேங்கில் ஃபிரீ கேபிள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.