ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமல் டெக்ஸ்ட் செய்ய தெரியுமா?

  ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமல் டெக்ஸ்ட் செய்ய தெரியுமா?

புதுடெல்லி: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்புவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வாகனங்களை ஓட்டும் போது ஸ்மார்ட்போன்களில் பேசுவதும், டெக்ஸ்ட் செய்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்த கவலையை போக்கவே ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை கொண்டு ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். 

உங்களது ஸ்மார்ட்போனில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை இயக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

* உங்களது ஸ்மார்ட்போனில் டைப் செய்ய வேண்டிய ஆப்ஷனில் கீபோர்டு செயலியை ஓபன் செய்ய வேண்டும்.

* இனி கீபோர்டின் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* இனி ஸ்பீக் நௌ (Speak Now) ஆப்ஷன் தெரிந்ததும், நீங்கள் டைப் செய்ய வேண்டியவற்றை பேச துவங்கலாம். 

* அடுத்து சிறப்பு குறியீடுகளை டைப் செய்ய வேண்டுமெனில், அதற்கேற்ற வார்த்தைகளை கூற வேண்டும். 

* புதிய பத்தியை துவங்க அதற்கேற்ற கட்டளையை கூற வேண்டும்.