இமயமலைக்கு 5 நாள் பயணம் போலாமா?

இமயமலைக்கு 5 நாள் பயணம் போலாமா?

கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் காணப்படும் இந்த சர் கணவாய், பின் பார்வதிப் பள்ளத்தாக்கின் 50 கிலோமீட்டர்கள் தூரத்துக்குப் பரந்து விரிந்துக் காணப்படும் ஒரு இடமாகும். இந்த இடமே இவ்வளவு அகலம் என்றால், நாம் பார்ப்பதற்கு மட்டுமென்னக் குறைவானதொரு விஷயங்களா இங்குப் புதைந்திருக்கும். கண்டிப்பாக இருக்காது அல்லவா. அப்படி என்ன தான் இந்தப் பரந்து விரிந்தப் பகுதியினை நோக்கி நாம் செல்லும் பயணத்தில் காண முடியும்! வாங்கப் பார்க்கலாம். நம் வாழ்க்கையில் தித்திப்பானதொரு நாளாக இருப்பது நம் திருமண நாளாகும். அப்பேற்ப்பட்ட திருமண நாளில் எதாவது மறக்க முடியாத ஒரு அனுபவத்தினை அடைய விரும்புவது, கணவன் - மனைவியின் விருப்பமாக இருக்கும். அதனால், நான் என் கணவனுடன் சேர்ந்து எங்காவது ஒரு புதியப் பயணத்தின் மூலம் எங்கள் திருமண நாளினை இனிதேக் களிக்க எண்ண, எங்கள் பயணத்தினை ஈடு இணையற்ற ஒருச் சிறப்பானப் பயணமாக சர் கணவாய் மாற்றி, மனதினுள் நினைவுகளைப் புதைத்து, கண்ட அழகியக் காட்சிகளைப் பற்றிக் கட்டுரை எழுதவும் வைத்துவிட்டது என்று கூறும்பொழுது என்னை மீறியதொரு உணர்வு மீண்டும் அந்தப் பகுதியினைக் காண ஆசைக்கொள்கிறது. 

நாங்கள் சென்ற அந்தப் பயணம் ஒரு முடிவற்றப் பாடலாக ரீங்காரமாய் எங்கள் காதிற்குள் ஒலித்துக்கொண்டிருக்க, முடிவு தான் என்ன? என ஏங்கிய எங்கள் மனம் அந்தப் பகுதியினை விட்டு வெளியில் வர முடியாமல், தவியாய் தவித்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஐந்தாம் வருடத் திருமண நாளில் என் கணவனுக்கு ஒருப் புதிய உணர்வினைக் கண்டிப்பாகத் தர வேண்டும். எத்தனைத் திருமண நாள் வந்தாலும், இந்த வருட திருமண நாளை அவர் மறந்துவிடக்கூடாது என நான் மனதிற்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டுப் பயணத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டேன். பின் பார்வதிப் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த சர் கணவாய், அனைத்துச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணங்களைப் பூர்த்திச் செய்யும் வகையில் இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது நிலவெளிகளை சூழ்ந்துக் காணப்பட்டப் புற்களும், முகடுகளும், பள்ளத்தாக்குகளும், மலைகளும் என செல்லும் இடமெல்லாம் என் கணவன் தோளில் சாய்ந்து ரசிப்பதற்கு ஏதுவானப் பல இடங்கள் அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து காதல் வலையில் பிண்ணிக்கொண்டிருக்க, வெளியில் வர முயற்சி செய்யாத என் மனம் அமைதியானது. மேலும் அது ஒருச் சிறந்த அனுபவப் பயணமாகவும் எங்களுக்கு அமைந்தது. 

காசோலில் தொடங்கும் இந்தப் பயணம் ஹிப்பிகளின் புகலிடமாக விளங்குகிறது. மேலும் இந்தப் பகுதி பொகீமியன் வாழ்க்கைப் பற்றியும் நாம் தெரிந்துக் கொள்ள உதவுகிறது. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு நாம் பயணிப்பதன் மூலம் சுமார் 50 கிலோமீட்டர்கள் நடக்க போகிறோம் என்பதனை தெரிந்துக்கொண்ட நான் கொஞ்சம் வியந்தே போனேன் என்று சொல்லலாம். இந்தப் பயணத்திற்கு ஏதுவானதொருக் காலநிலை: மே முதல் அக்டோபர் வரையிலானக் காலங்கள் இந்த இடத்தினை நாம் காண ஏதுவாக அமைந்து நம் பயணத்தினை மேலும் மெருகூட்டுகிறது. குளிர்காலத்தில் பயணம் செய்யாமல் நாம் தவிர்ப்பது மிக நல்லதாகும். ஆம், குளிர்காலத்தின் போது ஏற்படும் நிலச்சரிவு நம் பயணத்திற்கு முட்டுக்கட்டையிடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். அதேபோல் இங்குள்ள மலைகளை எந்நேரமும் பனிகள் சூழ்ந்தபடியே காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மே மாதங்களில் பனிப்பொழிவும் இங்குக் காணப்படுவது வழக்கமாக இருக்கிறது. பயணத்திற்கு நமக்குத் தேவையான அத்தியவாசியப் பொருட்கள்: 

மலைகளில் ஏற உகந்தக் காலணிகள், முதுகில் மாட்டும் தன்மைக் கொண்டதொருப் பை, புகைப்படக்கருவி, தலை முதல் கால் வரை கவரக்கூடிய ஒரு ஓவர்கோட், வெப்பங்கள், காலுறைகள், சூரியன் வெப்பத்திலிருந்துப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படும் கண்ணாடிகள், கதிரவன் ஒளியிலிருந்துக் காத்துக்கொள்ளப் பயன்படும் தொப்பிகள், கையுறைகள், மலையில் ஏறப் பயன்படும் ஒரு குச்சி, தலையில் வைத்துக்கொள்ளும் ஒரு ஒளிவிளக்கு, குளியல் சம்பந்தப்பட்ட சோப் வகைகள், மருந்துகள் அடங்கியதொரு முதலுதவிப்பெட்டி, தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள் என நாம் பயணத்திற்குத் தேவையானப் பொருட்கள் அடங்கியப் பட்டியலின் நீளம் பெரிதாகிறது. நானும் என் கணவரும் பூந்தாரில் உள்ளக் குள்ளு விமான நிலையத்திற்கு காதல் கொடிப் பறக்க, பறந்துச் சென்றுச் சேர்ந்தோம். அங்கிருந்துப் பேருந்தின் மூலமாக மணலிக்குச் சென்ற நாங்கள், அங்கு இரவுப் பொழுதினை இனிமையானதொரு முறையில் களி(ழி)த்து அதிகாலையில் சீக்கிரமே எழுந்துக் காசோலை நோக்கிப் புறப்பட்டோம்.

கணவன் என் முகத்தில் இதழ்பதிக்கவே நான் எழுந்தேன் கதிரவனை விட கணவன் முத்தத்திற்கு என்ன அவ்வளவு சக்தியா! நாங்கள் இருவரும் தயாராகி காசோலில் இருந்துப் புறப்பட்டு செல்ல, அங்குக் காணப்பட்டப் பச்சைப் பசேல் நிறைந்தக் காடுகளின் வழியேச் சென்ற என்னை, சிறிதுப் பயம் தொற்றிக்கொள்ள அவன் தோள்களை நான் இறுக்கப் பிடித்துக்கொண்டு இங்கு சிங்கம், புலி எல்லாம் இருக்குமா எனக் கேட்க, அவன் என் நெற்றியில் இதழ் பதித்து நான் இருக்கிறேன் என சொல்லாமல் சொல்லி என்னை அழைத்துச் செல்ல, நாங்கள் சென்றப் பாதை எங்களை க்ரஹான் நால்லாஹ் ஓடையினை நோக்கி வரவேற்றது. இந்த மென்மையான ஓடையில் நாங்கள் முன்னேறிச் செல்ல, கடல் மட்டத்திலிருந்து 1700 முதல் 2350 மீட்டர் வரைக் காணப்பட்டப் பகுதியினை நாங்கள் அடைந்தோம். அந்த சாய்வானப் பகுதி எளிதாகக் காணப்பட்டாலும், அந்தப் பரந்து விரிந்த 10 கிலோமீட்டரை நாங்கள் கடக்க, தோராயமாக 5 மணி நேரம் எங்களுக்குத் தேவைப்பட்டது. நாங்கள் சென்றப் பயணத்தின் கடைசி 2 கிலோமீட்டர்கள் செங்குத்தான ஒருப் பகுதியாக ஏறி காணப்பட்டது. நாங்கள் இருவரும் நல்லாஹ் பகுதியினைக் கடந்துச் செல்ல, பயணத்தின் பாதை, பாறைகளாக மாற, நான் என் கண்களைப் பயம் கொண்டுச் சுருக்கினேன், உடனே என் கணவன் எனக்குத் தைரியம் சொல்வது போல் என் கைகளை இறுக்கப்பற்றிக்கொண்டான். நாங்கள் சென்ற வனத்தில் அமைந்திருந்தப் புதர்கள் எங்களுக்கு வழிக்கொடுக்க, க்ரஹான் பகுதி இந்த இனிமையான முதல் நாள் பயணத்திற்கு ஓய்வுத்தரும் வகையில் அமைந்து எங்களை வரவேற்றது. ரோடோடென்ரான் புதர்கள் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்று என்பதனை நாங்கள் தெரிந்துக்கொள்ள ஆச்சரியத்துடன் அவற்றினைக் கண்டோம். அங்கு நாங்கள் நுகர்ந்த வாசனை எங்களை அசரவிடாமல் இறுக்கிப்பிடிக்க, க்ரஹான் கிராமத்தில் நாங்கள் கூடாரமிட்டு எங்கள் முதல் நாள் இரவு பொழுதில் நான் என் கணவன் மடியில் அயர்ந்தபடி இனிமையாக செலவிட்டுத் தூங்க, என்னை தட்டிக்கொடுத்தபடி அவனும் தூங்கினான். 

நாங்கள் இருவரும் இரண்டாம் நாள் பயணத்தில் கிரஹானின் வடக்குப் பகுதியினை நோக்கி நடக்க, கடல் மட்டத்திலிருந்து 3400 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள மின் தச் பகுதியினை அடைந்தோம். அங்கிருந்த மரங்களைக் கடந்துச் சென்ற நாங்கள், ஒரு அடர்ந்தக் காட்டினை மறுபடியும் அடைந்தோம். நான் என் கணவனை கேள்வியாக பார்க்க, 'என்ன இங்கும் சிங்கம், புலி எல்லாம் இருக்கும் எனப் பயமா? நீ பயம் கொண்டாலும் நான் சொல்லும் ஆறுதல் நான் இருக்கிறேன் என்றதொரு வார்த்தை என்பது உனக்கு தெரியுமல்லவா' என அவன் சிரிக்க, அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டு முன்னோக்கி நான் நடந்தேன். நாங்கள் சென்ற அந்தப் பகுதி, செங்குத்தாக காணப்பட, 2 கிலோமீட்டர்கள் கடந்த நாங்கள் புல்வெளிகள் அடங்கிய அழகியப் பசுமை நிறைந்தப் பகுதியினை அடைந்தோம். அப்பொழுது தான் மின் தச் என்றச் சொல்லுக்குப் புல்வெளிகள் என்றதொரு அர்த்தம் என்று எங்களுக்குத் தெரிய வந்தது. ஆச்சரியத்தில் எல்லைக்கேச் சென்ற நாங்கள், அன்று கடந்து வந்தப் பாதையின் இனிமையானதொரு நிகழ்வை பற்றிப் பேசியபடிக் கூடாரம் அமைத்து இதர நாளினை ஓய்வின் மூலம் செலவிட்டோம்

நான்காம் நாளில் நாங்கள் இருவரும் எழுந்து சர் கணவாயினை நோக்கி நடக்க ஆரம்பிக்க, நேற்றையப் பொழுதினை விட இந்த நாள் பயணம் நீண்டதாகவும் அழகானதாகவும் எங்களுக்கு அமைந்தது. நாங்கள் இருவரும் சர் கணவாயின் மேல் நோக்கி ஏறிச் செல்ல, தெற்கு பகுதியில் காணப்பட்ட மலைமுகட்டுப் பகுதியின் செங்குத்தான இடத்தினை நாங்கள் அடைந்தோம். அந்தப் பாதையில் நடந்த எங்களுக்கு, அது 100 வருடப் பயணம் போல் தோன்றினாலும் நிஜத்தில் அது 14 கிலோமீட்டர் பயணம் தான் என்பதனைச் சொல்லும்போது அந்தப் பாதையின் கடினத்தினை உங்களால் உணர முடிகிறது அல்லவா! இறுதியாக நாங்கள் கடல் மட்டத்திலிருந்து 4200 மீட்டர் தொலைவில் காணப்பட்ட சர் கணவாயின் மேல்புறத்தினை அடைந்தோம். இந்தத் தூரத்தினைக் கடக்க, எங்களுக்கு 8 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது என்பதனைத் தெரிந்துக்கொள்ளும் நம் மனம், கொஞ்சம் அசதியாகவேக் காணப்பட, இருப்பினும் அருகில் இருக்கும் என்னவனைக் கண்டு ஆரவாரத்துடன் செல்கிறதே! இது தான் காதலா என்ன!!!

கடல் மட்டத்திலிருந்து 3350 மீட்டர் உயரத்தில் காணப்பட்ட அந்தப் பிஸ்கேரி தச்சினில் இருந்தக் கூடாரத்தினை விட்டுப் புறப்பட்ட நாங்கள், செங்குத்தானப் பகுதியினை நோக்கி நடக்க, இடதுபுறத்தில் காணப்படும் ஓடை ஒன்று எங்களுக்குத் துணையாக அமைந்து எங்கள் மனதினைக் காட்சிகளால் வருடியது. ஓடைகளைக் கடந்து நாங்கள் செல்ல, பாதைத் திடிரென முடிய நான் ஒரு நிமிடத்தில் பயம் கொண்டு என் கணவன் மார்பில் முகத்தினைப் புதைத்துக்கொண்டேன். நல்லவேளை எங்களுடன் வந்த வழிக்காட்டியாளர் பாதையை காண்பித்து அழைத்துச் செல்ல, அந்த உணர்வுகள் பொங்க நானும் அவனும் அடர்ந்த காடுகளின் வழியே நடந்து சென்றோம். அந்த இனிமையானதொருப் பயணமும் இனிதேத் தொடர்ந்து சென்று எங்கள் காதலை உணர்ச்சிகளால் வெளிப்படுத்தியது. நாங்கள் இன்னும் சில கிலோமீட்டர் முன்னோக்கிச் செல்ல, புல்வெலி நிறைந்தப் பகுதிகளை அடைந்தோம். அந்த வழியில் நாங்கள் கண்ட மரத்தின் விளிம்புகள் எங்கள் மனதினை வெகுவாக கவர்ந்துக் காட்சியைக் கொண்டு கைது செய்தது. எங்களுடையப் பயணத்தில் நாங்கள் கண்ட அழகானக் காட்சிகளுள் இதுவும் ஒன்று எனத் தோன்ற முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் அந்த செங்குத்தானப் பகுதியில் இறங்கி நடக்க, மனம் இதமானதொரு உணர்வினைக் கொண்டுத் தவித்தது. அந்த செங்குத்தானப் பகுதிகளின் நீளம் நாங்கள் புல்காக் கிராமத்தினை அடையும் வரைக் காணப்பட்டது. 

நாங்கள் இருவரும் புறப்பட்டு ஜீப்பின் மூலம் பர்சைனியிலிருந்துக் காசோலை நோக்கிச் செல்ல, அந்த இனிமையானதொருப் பயணம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், என் கணவன் என்னிடம் நடந்துக்கொண்ட விதமும், அவன் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அந்த நொடியும், என் மனதில் நீங்கா நினைவாய் பதிந்துப் போனது என்றுச் சொல்லும்பொழுதுப் எனக்குள் பேரானந்தம் ஏற்படுகிறது. காசோலில் இருந்துப் புறப்பட்ட நாங்கள் பேருந்தின் மூலம் பூந்தாரை அடைந்தோம். அங்கிருந்து விமானத்தின் மூலம் குள்ளுவிற்கு சென்று அதன் பின் பெங்களூரை அடைந்தோம். மலைகளைப் போன்று தான் நம் வாழ்க்கையும். மலைகளில் இருக்கும் இயற்கைக் கொஞ்சம் கூட குறையாமல் நிலைத்துக் காணப்படுவது போல், எந்த ஒருக் காரணத்திற்காகவும் பிடித்த ஒன்றினை நாமும் விட்டுக்கொடுக்க கூடாது. ஆம், இது மலைகளுக்கு மட்டும் பொருத்தமான ஒன்றல்ல, நம் வாழ்க்கைக்கும் பொருத்தமானதொரு உணர்வு என்பதனை இந்தப் பயணம் மூலம் நான் நன்றாகவேத் தெரிந்துக்கொண்டு, இந்த வருடத் திருமண நாள் என் கணவனாலும் மறக்க முடியாது என்பதனை அவன் இதழ்கள் உதிர்க்க தெரிந்துக்கொண்ட நான், பயணத்தின் பெருமையை உணர்ந்து முழுமையான மகிழ்ச்சி உணர்வினை கொண்டு துள்ளிக் குதித்தேன்.